/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதர் கோவிலில் நாளை ஆண்டாள் திருக்கல்யாணம்
/
வரதர் கோவிலில் நாளை ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED : ஜூலை 26, 2025 08:01 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரமான நாளை, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரம் உத்சவத்தையொட்டி கடந்த 19ம் தேதி முதல், தினமும் மாலை 5:30 மணிக்கு திருவடி கோவில் வரை ஆண்டாள் வீதியுலா நடைபெறுகிறது.
மீண்டும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் ஆண்டாளுக்கு, சன்னிதியில் ஊஞ்சல் சேவை உத்சவம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஆடிப்பூரம் தினமான நாளை மாலை, வரதராஜ பெருமாள், ஆண்டாள் திருவடி கோவில் புறப்பாடு மற்றும் திருக்கோவில் திருமுற்றவெளியில் மாலை மாற்றல், திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது.
தொடர்ந்து கண்ணாடி அறையில் தரிசனம் நடைபெறும்.
நாளை மறுநாள், மாலை 5:30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார், ஆண்டாள் மாட வீதி புறப்பாடு திருக்கல்யாண ஊர்கோலம் நடைபெறுகிறது.

