/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மகளிர் குழு இடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
/
மகளிர் குழு இடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 13, 2025 01:39 AM

வாலாஜாபாத்,:நத்தாநல்லுார் கிராமத்தில், மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் ஏற்படுத்த அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்தில் மூன்று அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில், ஊராட்சி அலுவலகம் அருகே இயங்கும் அங்கன்வாடி மையம், மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தில் இயங்குகிறது.
இக்கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளதால், மழை நேரங்களில், வகுப்பறையில் நீர் சொட்டுகிறது.
இதனால், அச்சமயம் குழந்தைகள் உள்ளே அமர முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், பழுதடைந்த இக்கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்பதால், மழைக் காலத்தில் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்பட்டுகின்றனர்.
எனவே, அப்பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது,
நத்தாநல்லுாரில், மகளிர் சுயஉதவிக் குழு கட்டத்தில் இயங்கும் அங்கன்வாடிக்கு, 2015ல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது
ஆனால், அக்கட்டடம் தொலை துாரமாக உள்ளதாக குழந்தைகளை அங்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புதியதான அக்கட்டடத்தில் தற்காலிகமாக துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது.
பெற்றோரை ஒருங்கிணைத்து அவர்களிடம் ஆலோசித்து புதிய அங்கன்வாடி கட்டடத்திற்கு குழந்தைகளை அனுப்பி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.