/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை
/
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 27ல் வார்ஷிக ஆராதனை
ADDED : டிச 21, 2024 10:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் வரும் 27ல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடக்கிறது.
ஆராதனை மஹோத்ஸவத்தையொட்டி 25ம் தேதி முதல் 27 வரை சங்கரமடத்தில் உள்ள மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தின் முன், வேதபாராயணம், வித்வத்சதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், ஸங்கீதாஞ்சலி நடக்கிறது.
வரும் 27 ம் தேதி காலை 7:00 மணிக்கு ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள், மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கரமடத்தின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்த்ரி, மேலாளர் சுந்தரேச ஐயர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.