/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண் கொலை வழக்கில் மற்றொருவருக்கும் குண்டாஸ்
/
பெண் கொலை வழக்கில் மற்றொருவருக்கும் குண்டாஸ்
ADDED : செப் 02, 2025 01:17 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பெண் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், அஸ்வினி,30, என்ற பெண், கணவரும் வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி, தொழிற்சாலைக்கு பணிக்கு சென்று இரவு வீடு திரும்பிய அஸ்வினியை இருவர் அடித்து கொலை செய்து, வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்தனர்.
இவ்வழக்கில், ராஜசேகர், தமிழ்வாணன் ஆகிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட பாலுச்செட்டிச்சத்திரம் என்.எஸ்.கே.,நகரை சேர்ந்த தமிழ்வாணன், 25, குண்டர் சட்டத்தில் நான்கு நாட்கள் முன்பாக கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, மற்றொரு குற்றவாளியான பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், 27. என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி.,சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதை தொடர்ந்து, ராஜசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலுார் சிறையில் உள்ள அவரிடம் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.