/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : டிச 05, 2024 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அமராவதிபட்டனத்தில், ஆனம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 42, என்பவருக்கு சொந்தமான கல் அரைக்கும் கிரஷர் உள்ளது.
இங்கு, கடந்த மார்ச் 13-ம் தேதி பேட்டரி, வெல்டிங் மிஷின், காப்பர் பிளேட் ஆகியவை திருடுபோனது. சதீஷ் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசாரின் விசாரணையில், அங்கம்பாக்கத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி, 36, செந்தில், 31, ஆகியோர் என தெரியவந்தது.
ஏற்கனவே ஜெயமூர்த்தியை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த செந்திலை, நேற்று காலை போலீசார் கைதுசெய்தனர்.