/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சூரிய மின்பலகை வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சூரிய மின்பலகை வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சூரிய மின்பலகை வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சூரிய மின்பலகை வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : பிப் 22, 2026 05:52 AM
காஞ்சிபுரம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடம் இருந்து, சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை, 'தாட்கோ' வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், 18 - 32 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

