/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒப்பனை கலை பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
ஒப்பனை கலை பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 13, 2025 09:28 PM
காஞ்சிபுரம்: 'தாட்கோ' வழங்கும் ஒப்பனை, அழகுகலை, பச்சை குத்துதல் போன்ற திறன் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
'தாட்கோ' எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 - 35 வயதிற்குள்ளாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் சேர, 'தாட்கோ' இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

