sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

/

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூன் 06, 2025 08:24 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ என அழைக்கப்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி; தொழில் உற்பத்தி பயிற்சி; டிஜிட்டல் திறன் பயிற்சி; இணைய தொழில்நுட்ப பயிற்சி; டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பலவித பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 2021 - 2024ம் ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களின் குடும்பத்தினரின் வருவாய் 3 லட்சம் ரூபாய்க்கும் மிகையாமல் இருக்க வேண்டும். இந்த பயிற்சி பெற www.tahdco.com http://www.tahdco.com இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 55 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு, சென்னை விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினங்களை தாட்கோ வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us