கைவினைஞர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
கைவினைஞர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 21, 2026 08:01 AM
காஞ்சிபுரம்: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், கைவினைஞர் பயிற்சி திட்டத்தில் சேர, மாணவ - மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காஞ்சிபுரம் கலெக்டர் சினே கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2026- - 27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக தொடங்கியுள்ளது.
இதில், எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங் கப்படுகிறது. மேலும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இது தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள, காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை அணுகலாம். தவிர govtitikanchipuram@gmail.com என்ற இ - மெயிலிலோ அல்லது 044-- 2722 5350, 96594 52204 மற்றும் 94444 96306 என்ற மொபைல் போன் எண்களிலோ தொடர்பு கொண்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
