/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு
/
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஏப் 27, 2025 02:17 AM
காஞ்சிபுரம்::பள்ளிகளில் பயிலும் மாணவ ---- மாணவியர் விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன்கூடிய விளையாட்டு விடுதிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், தமிழகத்தில் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியர், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய, மே 5ம் தேதி மாலை 5:00 மணி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்.
விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ - மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற மே 7ம் தேதி, காலை 7:00 மணியளவில் ஆண்களுக்கும், 8ம் தேதி பெண்களுக்கும் நடைபெற இருப்பதால், 'ஆன்லைனில்' விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாமல் பங்கேற்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸாப் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.