/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு
/
ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு
ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு
ஓரிக்கை தொழிற்கூட தகுதி சான்று பிரிவுக்கு பாராட்டு
ADDED : ஏப் 16, 2025 09:40 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு அரசு போக்குரவத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள ஆறு மண்டலங்களில் உள்ள 55 பணிமனைகளிலும், விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் குணசேகரன் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை மத்திய தொழிற்கூட தகுதி சான்று பிரிவில் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின், தமிழகத்திலேயே ஓரிக்கை மத்திய தொழிற்கூட தகுதி சான்று பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழிற்கூடம், அலுவலகம் உள்ளிட்டவற்றை சுத்தமாகவும், பேருந்தை பழுதுநீக்க பயன்படுத்தும் உபகரணங்கள், பேருந்துக்கான உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சீராகவும், நேர்த்தியாகவும், சிறப்பான முறையில் பராமரித்து பணியாற்றி வரும் தொழிற்கூட ஊழியர்களையும், மேலாளர் கருணாகரனையும் மேலாண் இயக்குனர் குணசேகரன் பாராட்டினார்.
ஆய்வின்போது, கூட்டாண்மை பொது மேலாளர் ரவீரந்திரன், மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி மற்றும் மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர்.