/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசனம்
/
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 11, 2025 07:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
நாளை ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு வேள்வியும், காலை 4:30 மணிக்கு 21 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், காலை 9:00 மணிக்கு சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜ பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.