/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிகள் நிரம்பாததால் வெள்ள பாதிப்பு குறைவு
/
ஏரிகள் நிரம்பாததால் வெள்ள பாதிப்பு குறைவு
ADDED : அக் 15, 2024 09:03 PM
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்தில் வரதராஜபுரம், திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கொல்லச்சேரி, மலையம்பாக்கம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில், ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இங்கு வெள்ள நீரை வெளியேற்றவும், மீட்பு பணிகளில் ஈடுபடவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கடந்த இரு நாட்களாக, மிதமான மழை பெய்வதால் ஏரிகளுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.
மணிமங்கலம் ஏரி, சோமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே, புறநகர் பகுதிகளான வரதராஜபுரத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும். ஏரிகள் முழு கொள்ளளவை எட்டாததால், நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி வரதராஜபுரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் வெள்ள பாதிப்பு இல்லை. தாழ்வான சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கி காணப்பட்டது.