/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1,538 கோடி சொத்துக்கள் ஓராண்டில் பதிவு 2022 - 23ஐ காட்டிலும் ரூ.309 கோடி குறைவு
/
ரூ.1,538 கோடி சொத்துக்கள் ஓராண்டில் பதிவு 2022 - 23ஐ காட்டிலும் ரூ.309 கோடி குறைவு
ரூ.1,538 கோடி சொத்துக்கள் ஓராண்டில் பதிவு 2022 - 23ஐ காட்டிலும் ரூ.309 கோடி குறைவு
ரூ.1,538 கோடி சொத்துக்கள் ஓராண்டில் பதிவு 2022 - 23ஐ காட்டிலும் ரூ.309 கோடி குறைவு
ADDED : ஜன 23, 2025 07:30 PM
காஞ்சிபுரம்:பதிவுத்துறையில் எல்லைகள் மாற்றி அமைத்தது மற்றும் புதிய மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் துவக்கியது உள்ளிட்ட காரணங்களால், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலக எல்லையில் இருந்த பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
தற்போது காஞ்சிபுரத்தில், இணை சார் - பதிவாளர் அலுவலகம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆகிய மூன்று பதிவாளர்கள் அலுவலகங்களும், தாமல், வாலாஜாபாத் ஆகிய பதிவாளர் அலுவலகங்கள் என, மொத்தம் ஐந்து சார் - பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே பதிவுத்துறை மாவட்ட எல்லைக்குள் செயல்படுகின்றன.
இந்த ஐந்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், ஒவ்வொரு ஆண்டும், 1,000க்கும் மேற்பட்ட பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்தாண்டும் 1,000க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகியுள்ளன.
ஆனால், 2022 - 23ம் ஆண்டை காட்டிலும், 2023 - 24ம் ஆண்டில் பதிவுகளின் எண்ணிக்கையும், அதன் வாயிலாக பரிவர்த்தையான சொத்துக்களின் மதிப்புகளும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2022 - 23ல், 31,623 பத்திரங்கள் கிரையம், அடமானம், திருமண பதிவு, உயில் போன்ற பல்வேறு விவகாரங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவுகள் வாயிலாக, 1,847 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் பரிமாற்றம் நடந்தது.
கடந்த 2023 - 24ல், 29,808 பத்திரங்கள் பதிவாகியுள்ளன. இதன் வாயிலாக 1,538 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதன் வாயிலாக, 1,815 பத்திரங்கள் குறைவாக பதிவான காரணத்தால், கடந்தாண்டை காட்டிலும் 309 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பதிவு குறைந்துள்ளது.
விமான நிலைய திட்டம், புதிய விரைவு சாலை, தொழிற்சாலைகளின் வருகை போன்ற காரணங்களால், ரியல் எஸ்டேட் தொழில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் நிலையில், கடந்தாண்டு 309 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பரிமாற்றம் குறைந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

