நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் சங்கத்தின், 98வது மாநில மத்திய செயற்குழு மாநாடு நேற்று நடந்தது.
தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் சங்க மாநாட்டிற்கு, மாநில தலைவர் செல்வ பாண்டியன் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில், ஊதியம் மற்றும் இதர படிகள் ரொக்கமாக வழங்க வேண்டும். தணிக்கை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பிற மாநிலங்களில் அமல்படுத்திய, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என, 23 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.