/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாய் - மகன் மீது தாக்குதல் அத்தை, மகனுக்கு 5 'ஆண்டு'
/
தாய் - மகன் மீது தாக்குதல் அத்தை, மகனுக்கு 5 'ஆண்டு'
தாய் - மகன் மீது தாக்குதல் அத்தை, மகனுக்கு 5 'ஆண்டு'
தாய் - மகன் மீது தாக்குதல் அத்தை, மகனுக்கு 5 'ஆண்டு'
ADDED : பிப் 01, 2025 09:00 PM
காஞ்சிபுரம்:சென்னை, ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது தந்தை சந்தானம் இறப்புக்கு பின் நடந்த காரியத்துக்கு, தன் அத்தை வராத காரணம் குறித்து, கடந்த 2014ல், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள எட்டுகுட்டிமேடு கிராமத்திற்கு, தாய் பொன்னம்மாளுடன் சென்றார்.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், சதீஷ் மற்றும் பொன்னம்மாள் ஆகிய இருவரையும், அத்தை மல்லிகா, அவரது மகன் ராஜேஷ் மற்றும் சந்திரசேகரன், முத்து, குமார், ரமேஷ், ஆகிய ஐந்து பேர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் காயடைந்த இருவரும், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, வழக்குப் பதிந்த போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் ராஜேஷ், 32, மல்லிகா, 56, சந்திரசேகரன், 40, ஆகிய மூவருக்கும், ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், முத்து, 55, குமார், 48, ரமேஷ், 36, ஆகிய மூவருக்கும், மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, காஞ்சிபுரம் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி அருண்சபாபதி உத்தரவிட்டார்.