/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்துகளில் இலவச பயண சீட்டு முதியோருக்கு வழங்க அதிகாரிகள் மறுப்பு
/
பேருந்துகளில் இலவச பயண சீட்டு முதியோருக்கு வழங்க அதிகாரிகள் மறுப்பு
பேருந்துகளில் இலவச பயண சீட்டு முதியோருக்கு வழங்க அதிகாரிகள் மறுப்பு
பேருந்துகளில் இலவச பயண சீட்டு முதியோருக்கு வழங்க அதிகாரிகள் மறுப்பு
ADDED : அக் 14, 2025 12:52 AM
காஞ்சிபுரம், மாநகர பேருந்துகளில், இலவசமாக பயணம் செய்யும் திருமங்கலம் கிராமத்தை சுற்றியுள்ள முதியவர்களுக்கு, அனுமதி சீட்டு வழங்குவதில்லை. இதனால், 15 கிராமங்களைச் சேர்ந்தோர், மாநகர பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் கோட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களின் கீழ், 576க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, சென்னை - கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் இருந்து, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்கள் வரையில், மாநகர பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
உதாரணமாக, காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வரையில், 15 ரூபாய் டிக்கெட் கட்டணம். அதேபோல, வாலாஜாபாதில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 15 ரூபாய் டிக்கெட் கட்டணம் என, தினசரி ஒருவர் வாலாஜாபாதிற்கு சென்று வர, 30 ரூபாய் டிக்கெட் கட்டணமாகிறது.
ஒருவர், 20 நாட்களுக்கு 600 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்திவிட்டு, 30 நாட்களுக்கு பயணம் செய்யலாம்.
அதேபோல, மாதம் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு மாநகர அரசு பேருந்துகளில், பயண அட்டை பெற்று ஒருவர் எங்குவேண்டுமானாலும் பயணம் செய்யலாம். மேலும், 100 ரூபாய் செலுத்தி விட்டு, ஒரு நாள் முழுதும் விரும்பிய இடங்களுக்கு மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம்.
இதுதவிர, முதியோர் கட்டணம் செலுத்தாமல், மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு, முதியவர் பயன்பெற முகவரி சான்று மற்றும் புகைப்படம் இருந்தால் போதும். மூன்று மாதங்களுக்கு இலவசமாக பயணம் செய்யும் டிக்கெட் பெற்று, மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்த டிக்கெட் பெற, திருமங்கலம் சுற்றியுள்ள முதியவர்களுக்கு கொடுக்க மாநகர போக்குவரத்து துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, திருமங்கலம் சுற்றியுள்ள மொளச்சூர், சுங்குவார்சத்திரம், எச்சூர், செலையனுார், சந்தைவேலுார், சிறுமாங்காடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம முதியவர்கள், திருமங்கலம் ஊராட்சியில் இருக்கும் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் செய்யும் இலவச டிக்கெட் பெற முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் கூறியதாவது:
மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய முதியோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது, திருமங்கலம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வழங்குவதில்லை.
திருமங்கலம் ஊராட்சியில் தான், சுங்குவார்சத்திரம் உள்ளது. சுங்குவார்சத்திரம் என முகவரி இருந்தால் மட்டுமே முதியோர் இலவச டிக்கெட் வழங்கப்படும்.
திருமங்கலம் என இருந்தால் வழங்க முடியாது என, முதியோர்களை அலை கழிக்க வைக்கின்றனர்.
இவ்வாறு கூறினர்.