/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாயமாகி வரும் குளம் அதிகாரிகள் பாராமுகம்
/
மாயமாகி வரும் குளம் அதிகாரிகள் பாராமுகம்
ADDED : டிச 09, 2024 01:14 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சித்தனக்காவூர் ஊராட்சி, தண்டரை கிராமத்தில் செல்லியம்மன் குளம் உள்ளது. கடந்த 2018 - -19ம் நிதியாண்டில், மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில், 2.11 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
இந்த குளத்து தண்ணீர் வாயிலாக, அப்பகுதி கால்நடைகள் தாகம் தீர்ந்து வந்தது. தற்போது, குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி காட்சியளிக்கிறது.
கால்நடைகள் தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் குளத்தை சீரமைக்க அலட்சியம் காட்டி வருகிறது.
எனவே, செல்லியம்மன் குளத்தை சீரமைக்க, சித்தனக்காவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.