ADDED : செப் 16, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு;செங்கல்பட்டு அருகே, கார் மோதியதில் ஆட்டோ சேதமடைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, 49. செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார்.
நேற்று காலை, 'மாருதி சுசூகி' காரில் வேலைக்குச் சென்றார். காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், திம்மாவரம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ மற்றும் காரின் முன் பக்கம் சேதமடைந்தது.
சிறு காயங்களுடன் ராஜி தப்பினார்.