/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
d/c நிலைத்தடுமாறி விழுந்த ஆட்டோ ஓட்டுனர் பலி
/
d/c நிலைத்தடுமாறி விழுந்த ஆட்டோ ஓட்டுனர் பலி
ADDED : ஜூலை 30, 2025 12:25 AM
உத்திரமேரூர், பெருங்கோழியில், வீட்டு வாசலில் நிலைத்தடுமாறி விழுந்த ஆட்டோ ஓட்டுனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உத்திரமேரூர் தாலுகா, சிறுங்கோழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 32; ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு, மனைவி ஹேமாவதி, 30, மகன் அபிநாஷ், 9, மகள் தர்ஷிகா, 7 உள்ளனர்.
தற்போது, ஹேமாவதி, கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டில், ஆறு மாதமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், பெருங்கோழியில் தனியாக வசித்து வரும் பாலாஜி, கடந்த 20ம் தேதி, வீட்டு வாசலில் நிலைத்தடுமாறி விழுந்துள்ளார். அப்போது, தலையில் காயம் ஏற்பட்ட அவரை, உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.