/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு
/
பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : செப் 01, 2025 01:51 AM
காஞ்சிபுரம்:பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பணியாற்றிய பெண் குழந்தைகள், மாநில அரசு விருதுக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல், 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2025 - -26ம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை 1 லட்ச ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு விண்ணப்பி க்க விரும்புவோர், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், மூட நம்பிக்கைக்கு தீர்வு காண்பதற்கான ஓவியங்கள், கவிதைகள் ஏற்படுத்தல் உள்ளிட்டவை செய்திருக்க வேண்டும்.
விருது பெற குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஆதாரங்கள் இணைந்து முன்மொழிவுகளை நவம்பர் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வி ண்ணப்பதாரர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் கருத்துருவை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப் பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.