/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
/
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜூன் 20, 2025 01:58 AM

உத்திரமேரூர்:காரணி மண்டபத்தில் உள்ள கடைகளில் தீ தடுப்பு குறித்து உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உத்திரமேரூர் அடுத்த, காரணி மண்டபம், மானாம்பதி, பெருநகர் ஆகிய பகுதிகளில் மரக்கடைகள், ஹோட்டல்கள், பேக்கரி கடைகள் ஆகியவை இயங்கி வருகின்றன.
இங்குள்ள கடைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து வருகின்றன.
இந்நிலையில், காரணி மண்டபம் பகுதியில் உத்திரமேரூர் தீயணைப்பு துறையின் சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நேற்று நடந்தது. அதில், அங்குள்ள பேக்கரி கடை ஒன்றில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் கடை உரிமையாளருக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, பேக்கரி கடையில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பான் கருவியை எடுத்து, அதை எவ்வாறு இயக்குவது குறித்து செயல் விளக்கம் காட்டினார்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டால் 101, 112 மற்றும் 94450 86148 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.