/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவ -- மாணவியருக்கு உடல் நலம் குறித்து விழிப்புணர்வு
/
மாணவ -- மாணவியருக்கு உடல் நலம் குறித்து விழிப்புணர்வு
மாணவ -- மாணவியருக்கு உடல் நலம் குறித்து விழிப்புணர்வு
மாணவ -- மாணவியருக்கு உடல் நலம் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜூன் 28, 2025 10:09 PM
வாலாஜாபாத்:உள்ளாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கான மனம் மற்றும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி கிராமத்தில் செயல்படும் பெண்கள் வழிகாட்டி அமைப்பினர், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவ - மாணவியருக்கு மனம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழப்புணர்வு முகாம் நடத்தினர்.
இதில், அந்த அமைப்பின் மாவட்ட நிர்வாகி சத்தியபாரதி பங்கேற்று, மாணவியருக்கான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து விளக்கி பேசினார். போதை பொருட்கள் பயன்பாட்டால் உடல், மனம் ரீதியாக ஏற்படும் கேடுகள், மனிதர்களின் உடல் உறுப்புகளுக்கான பாதிப்புகள், போதையால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து விளக்கி பேசினார்.
அப்பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தமல்லி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பழவேலி பெண்கள் வழிகாட்டி அழைப்பு ஒருங்கிணைப்பாளர் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.