/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 17, 2025 01:24 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கைத்தண்டலம் கிராமத்தில் உள்ள எழில்சோலை விவசாய பண்ணையில், தமிழ்நாடு வேளாண் தொழில்நுட்ப முகமை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, மரம் வளர்ப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில், காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மாசிலாமணி பேசியதாவது:
கோடை காலங்களில் மரக்கன்றுகளை நடாமல், மழைக்காலத்தில் நட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் மரங்களை நடக்கூடாது.
வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் ஆகிய நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மரங்களை வளர்ப்பதால் பறவைகளுக்கு இருப்பிடம் கிடைக்கிறது. மரங்களை அதிகமாக வளர்ப்பதால் பூச்சித் தாக்குதலில் இருந்து, விவசாய பயிர்களை காக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்; சுற்றுச்சூழலை பாதுகாத்து நிலத்தடி நீரை சேமிக்க, மரம் வளர்ப்போம்' என, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

