ADDED : மார் 28, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து, நேற்று விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
தமிழகம் முழுதும், வரும் ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என, வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என, மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் விளையாட்டரங்கத்தை வந்தடைந்தது. மேலும், நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களும் விழிப்புணர்வு நடந்ததினர்.
