/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமரச தீர்வு மையம் பற்றி விழிப்புணர்வு பேரணி
/
சமரச தீர்வு மையம் பற்றி விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 10, 2025 01:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சமரச தீர்வு மையம் சார்பில், வழக்குகளில் சமசர தீர்வு பற்றி தமிழகம் முழுதும் நீதிபதிகள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட சமரச தீர்வு மையம் பற்றிய விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல், நீதிமன்ற வளாகத்தில் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் என, பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய இப்பேரணி, காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில் சென்றது. பேரணியின்போது, சமரச தீர்வு மையம் பற்றியும் அதன் வாயிலாக கிடைக்கும் தீர்வு பற்றியும், துண்டு பிரசுரங்களையும், நீதிபதிகள் பொதுமக்களிடம் வழங்கினர்.

