ADDED : மார் 10, 2024 01:15 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊட்டச்சத்து பற்றி இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான விழப்புணர்வு நிகழ்ச்சி, 'போஷன் அபிஷான், போஷன் பக்வாடா' எனும் பெயரில், 9 - 23ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் கலெக்டர்வளாகத்தில், ஊட்டச்சத்து தொடர்பாக, விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர்கலைச்செல்வி தலைமையில் நேற்று எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி துவங்கி வைத்தார். காஞ்சிபுரம் நகரின் பல்வேறு வீதிகளில் இப்பேரணி சென்றது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
