ADDED : மார் 11, 2024 05:07 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சி முகாமிற்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். நல்லோர் வட்டத்தைச் சேர்ந்த அன்பு மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லோர் வட்ட நிறுவனர் பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் வெளிப்படுத்துவது, ஊராட்சி நிர்வாகங்களில் இளைஞர்களின் பங்களிப்பது, இளைஞர்கள் சுய தொழில் துவங்குவது, தொழில் முனைவோராக மாறுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் லெனின்குமார், தேவரியம்பாக்கம், பூசிவாக்கம் ஆகிய கிராம இளைஞர்கள் பங்கேற்றனர்.
