/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்களை அகற்ற அயிமிச்சேரி விவசாயிகள் வலியுறுத்தல்
/
ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்களை அகற்ற அயிமிச்சேரி விவசாயிகள் வலியுறுத்தல்
ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்களை அகற்ற அயிமிச்சேரி விவசாயிகள் வலியுறுத்தல்
ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்களை அகற்ற அயிமிச்சேரி விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 23, 2025 10:32 PM

வாலாஜாபாத்: அயிமிச்சேரி ஏரிக் கரையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அயிமிச்சேரி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையோரம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல உள்ளது.
நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வகையிலான சீமை கருவேல மரங் களை ஊராட்சிகள் தோறும் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் வாயிலாக உத்தரவிட்டும் இங்கு அதற்கான நடவடிக்கை இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, அயிமிச்சேரி விவசாயிகள் கூறியதாவது:
அயிமிச்சேரி ஏரிக்கரையை பல ஆண்டுகளாகவே சீமை கருவேல மரங்கள் ஆக்கிர மித்துள்ளது. இதனால், ஏரியின் மதகு மற்றும் கலங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏரிக்கரை வழியை பயன்படுத்தி சென்று வர இயலாத நிலை தொடர்கிறது.
இதே போல, சாகுபடி காலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ள டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை ஏரிக்கரை மீது கொண்டு செல்ல முடியவில்லை.
மேலும், சீமை கருவேல மரங்களால் ஏரி தண்ணீர் விரைவாக உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
எனவே, அயிமிச்சேரி ஏரிக்கரை மீது வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி ஏரிக்கரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

