/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யப்பா சேவா சமாஜம் நிர்வாகிகள் தேர்வு
/
அய்யப்பா சேவா சமாஜம் நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 03, 2025 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகர் புதிய பொறுப்பாளர்களின் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், காஞ்சிபுரம் கோட்ட பொறுப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்தது.
மாநில தலைவர் ஜெயசந்திரன், பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக சரவணன், காஞ்சி மாநகர் தலைவராக ரவி, காஞ்சிபுரம் ஒன்றிய தலைவராக பெரும்பாக்கம் பாலா மற்றும் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஒன்றியம், பல்வேறு பிரிவு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.