/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கொட்டப்படும் மாட்டு சாணத்தால் துர்நாற்றம்: திணறும் வாகன ஓட்டிகள்

ADDED : டிச 19, 2025 05:51 AM

ஸ்ரீபெரும்புதுார்: வட்டம்பாக்கம் சாலையோரம் கொட்டப்பட்டு உள்ள, மாட்டு சாணத்தால் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வண்டலுார் -- வாலாஜா பாத் சாலையில், ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் சந்திப்பில் இருந்து, வட்டம் பாக்கம் பிரதான சாலை பிரிந்து செல்கிறது.
வட்டம்பாக்கம், பனப்பாக்கம், காஞ்சிவாக்கம், உமையாள்பரனச்சேரி உள்ளிட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, தாம்பரம், ஒரடகம் பகுதிகளுக்கு நாள்தோறும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வட்டம் பாக்கம் பகுதிகளில் மாடுகளை வளர்ப்போர், மாட்டு சாணக் கழிவுகளை, வட்டம் பாக்கத்தில் இருந்து உமையாள்பரனச்சேரி செல்லும் சாலையோரம், பல்வேறு இடங்களில் கொட்டி வருகின்றனர்.
மாட்டு சாண கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மாட்டுச் சாணத்தை அகற்ற, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.