/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலையில் ஒப்பந்தம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் பிரமுகர் கைது

ADDED : அக் 25, 2024 01:05 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காடு பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெங்காடு ஊராட்சி, 5வது வார்டு உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலருமான முருகன், 36 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 33, டில்லிபாபு, 33, ரஞ்சித்குமார், 29, ஆகிய நான்கு பேர், நேற்று, கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று, மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் தண்ணி கேன் சப்ளை, டிராஸ்போர்ட், மேன்பவர் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இது குறித்து, தொழிற்சாலை சார்பில், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலர் முருகன், வினோத்குமார், டில்லிபாபு, ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.