/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பனங்கிழங்கு சீசன்: 4 கிழங்கு ரூ.20க்கு விற்பனை
/
பனங்கிழங்கு சீசன்: 4 கிழங்கு ரூ.20க்கு விற்பனை
ADDED : டிச 05, 2024 11:38 PM

காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருவண்ணாமலை, வட்டாரத்தில் பனங்கிழங்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து, காஞ்சிபுரம் சந்தைக்கு பனங்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை கடைகளிலும், தலைச்சுமை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் வீதி வீதியாக சென்று பனங்கிழங்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கீழ்கதிர்பூரை சேர்ந்த பனங்கிழங்கு வியாபாரி எம்.வெண்ணிலா கூறியதாவது:
உத்திரமேரூரில் இருந்து பனங்கிழங்கு மொத்தமாக வாங்கி வந்து, அதை நீராவியில் அவித்து, நான்கு பனங்கிழங்கு அடங்கிய ஒரு கட்டு, 20 ரூபாய் என, விற்பனை செய்கிறோம். தை மாதம் வரை பனங்கிழங்கு சீசன் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினர்.