/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பெட்ரோல் பங்க்குகளில் அடிப்படை வசதிகள் கட்டாயம்'
/
'பெட்ரோல் பங்க்குகளில் அடிப்படை வசதிகள் கட்டாயம்'
ADDED : பிப் 13, 2024 10:42 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில், வட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வட்ட வழங்கல் அலுவலர் வேலு தலைமையில் நடந்தது.
தனி வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் ஜெயராமன், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் கழிப்பறை, காற்று நிரப்பும் கருவி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டாயம் அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் அமைக்கப்படாத பெட்ரோல் பங்க்குகள் மீது துறை ரீதியான நவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வட்ட அளவிலான மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்திற்கு எரிவாயு வினியோகஸ்தினர், பெட்ரோல் பங்க் பொறுப்பாளர்கள் அவசியம் பங்கேற்று நுகர்வோரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

