ADDED : மார் 04, 2026 06:34 AM

பீ ட்ரூட் நிற அவரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
மணல் கலந்த களிமண் பூமியில், பலவித அவரைக்காய் நட்டுள்ளேன். இதில், பீட்ரூட் நிற அவரைக்காய் ரகமும் ஒன்றாகும். இது, காய் காய்க்கும் போது இளம் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த அவரைக்காயை சாம்பார் மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றில் சேர்த்தாலும் சுவை இரட்டிப்பாக உள்ளன.
குறிப்பாக, தை, மாசி ஆகிய மாதங்களில், பீட்ரூட் நிற அவரைக்காய் அதிக மகசூல் பெற முடியும். கோடை காலம் துவங்கி விட்டால், காய் மகசூல் குறைய துவங்கிவிடும். இந்த பீட்ரூட் நிற அவரைக்காய் வீட்டு தேவைக்கு போக, சந்தையில் விற்று விடுகிறேன். நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு - பி.குகன், 94444 74428.
