/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனவு இல்ல திட்டத்தில் வங்கி கடனுக்கு அதிகாரிகளின் வழிகாட்டி இல்லாததால் பயனாளிகள் அவதி
/
கனவு இல்ல திட்டத்தில் வங்கி கடனுக்கு அதிகாரிகளின் வழிகாட்டி இல்லாததால் பயனாளிகள் அவதி
கனவு இல்ல திட்டத்தில் வங்கி கடனுக்கு அதிகாரிகளின் வழிகாட்டி இல்லாததால் பயனாளிகள் அவதி
கனவு இல்ல திட்டத்தில் வங்கி கடனுக்கு அதிகாரிகளின் வழிகாட்டி இல்லாததால் பயனாளிகள் அவதி
ADDED : மே 14, 2025 09:18 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன.
இதில், 2011ம் ஆண்டு சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 17,653 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், கனவு இல்லம் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,453 பயனாளிகளுக்கு, வீடு வழங்கும் திட்டத்தில், வீடு கட்டும் ஆணையை, ஊரக வளர்ச்சி அளித்து உள்ளது.
எஞ்சி இருக்கும், 14,200 நபர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 3,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 800 பயனாளிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு கேட்டு, ஊராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சி ஆணையருக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பரிந்துரை செய்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு தேர்வு செய்த வீடு கட்டும் பயனாளிகளுக்கு கடன் வசதி செய்து கொடுப்பதாக ஊரக வளர்ச்சி துறையினர் வீடு கட்டும் பயனாளிகளை ஊக்குவித்து வந்தனர்.
கடன் பெற்றுக் கொடுக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என, கனவு இல்ல திட்ட பயனாளிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, கனவு இல்ல திட்ட பயனாளிகள் கூறியதாவது:
கனவு இல்ல திட்டத்தில் தேர்வு செய்த பயனாளி ஒருவருக்கு, 3.51 லட்ச ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு லட்ச ரூபாய் வங்கி கடன், 50,000 ரூபாய் மகளிர் குழு கடன் வழங்கப்படும் என, அறிவித்தனர்.
இதை நம்பி, வீடு கட்டுமான பணியில் இறங்கிவிட்டோம். அரசு வழங்கும் பணத்தை காட்டிலும் கூடுதலாக பணம் போட்டு வீடு கட்டி வருகிறோம்.
வங்கி கடனுக்கு அதிகாரிகள் முறையான வழி காட்டி இல்லாமல் கடன் பெற முடியாத நிலை உள்ளது. வெளியே கடன் வாங்கி தான் வீட்டு வேலை முடிக்க வேண்டிய சூழல் உள்ளது. வங்கி கடன் கிடைக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர், ஆகியோர் குழுவினர் வாயிலாக வங்கி கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில், வங்கி கடன் தேவைப்படுவோரின் விண்ணப்பங்கள் பெற்று, வங்கி கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.