/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
183 மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கல்
/
183 மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கல்
ADDED : நவ 22, 2025 01:14 AM

உத்திரமேரூர்: --உத்திரமேரூர் ஒன்றியத்தில், 183 மாணவ ---மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
உத்திரமே ரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சாலவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், இலவச சைக்கி ள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி தலைவர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது.
ஒன்றியக்குழு துணை சேர்மன் வசந்தி, பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீப்ரியா முன்னிலை வகித்த னர். உத்திரமேரூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, இலவச சைக்கிள்களை வழங்கினார்.
ரெட்டமங்கலம் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியிலும், மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி தலைவர் சுஜாதா தலைமையில் நடந்தது.
இரு பள்ளிகளிலும் 183 மாணவ -- மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங் கப்பட்டன.
இதில், ஒன்றிய கவுன்சிலர் நதியா, பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

