/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
867 பள்ளி மாணவ -- மாணவியருக்கு உத்திரமேரூரில் சைக்கிள்கள் வழங்கல்
/
867 பள்ளி மாணவ -- மாணவியருக்கு உத்திரமேரூரில் சைக்கிள்கள் வழங்கல்
867 பள்ளி மாணவ -- மாணவியருக்கு உத்திரமேரூரில் சைக்கிள்கள் வழங்கல்
867 பள்ளி மாணவ -- மாணவியருக்கு உத்திரமேரூரில் சைக்கிள்கள் வழங்கல்
ADDED : நவ 20, 2025 04:18 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில், 867 பள்ளி மாணவ -- மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் நேற்று வழங்கப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ -- மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சண்முகம், ஊராட்சி தலைவர் வளர்மதி முன்னிலை வகித்தனர்.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கம்மாளம்பூண்டி, உத்திர மேரூர், மானாம்பதி, பெருநகர் ஆகிய பகுதிகளிலும், பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மொத்தமாக, 867 மாணவ -- மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றிய தி.மு.க., செயலர் ஞானசேகரன், மானாம்பதி ஊராட்சி தலைவர் ராதா உட்பட பலர் பங்கேற்றனர்.