/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து தாய் கண் முன் இரு மகன்களும் பலி உரிய இழப்பீடு வழங்க சடலத்துடன் மறியல்
/
நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து தாய் கண் முன் இரு மகன்களும் பலி உரிய இழப்பீடு வழங்க சடலத்துடன் மறியல்
நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து தாய் கண் முன் இரு மகன்களும் பலி உரிய இழப்பீடு வழங்க சடலத்துடன் மறியல்
நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து தாய் கண் முன் இரு மகன்களும் பலி உரிய இழப்பீடு வழங்க சடலத்துடன் மறியல்
ADDED : நவ 20, 2025 04:19 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி புறவழிச் சாலையில், நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், தாய் கண் முன்பே, இரு மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் குளோரி, 38. இவரது கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், யுவராஜ், 18, சந்தோஷ், 16, என இரு மகன்களுடன் வசித்து வந்தார். மூத்த மகன் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டும், இளையமகன் பிளஸ் 1ம் படித்து வந்தனர்.
இந்நிலையில், கீழம்பி அருகே நடந்த காய்கறி சந்தைக்கு, குளோரி, யுவராஜ், சந்தோஷ் ஆகிய மூவரும், 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கில், 'ஹெல்மெட்' அணியாமல், நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
காய்கறிகள் வாங்கிக் கொண்டு, கீழம்பி புறவழிச் சாலையில், மூவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை யுவராஜ் ஓட்டி வந்தார்.
அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியது.
இதில், மூவரும் கீழே விழுந்தனர். தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த யுவராஜ், சந்தோஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த குளோரி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், யுவராஜ், சந்தோஷ் ஆகிய இருவரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த இருவரின் சடலத்தை பெற்றுக் கொண்ட உறவினர்கள், கீழம்பி புறவழிச்சாலையில் அமர்ந்து நேற்று மாலை மறியல் செய்தனர்.
கீழம்பி மற்றும் சுற்றி யுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலி ல் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
பாலுச்செட்டிச்சத்திரம் போலீசா ர், காஞ்சிபுரம் தாசில்தார் ரபீக் உள்ளிட்டோர், உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். உரிய இழப்பீடு, நீதியும் வழங்க வேண்டும் என தங்களுடைய கோரிக்கையை அவர்கள் தெரிவித் தனர்.
நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்த பின், போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

