/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறவை காய்ச்சல் எதிரொலி வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு
/
பறவை காய்ச்சல் எதிரொலி வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு
பறவை காய்ச்சல் எதிரொலி வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு
பறவை காய்ச்சல் எதிரொலி வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு
ADDED : பிப் 21, 2024 10:18 PM

திருத்தணி:வடமாநிலங்கள் மற்றும்ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில், கால்நடை துறையினர் முகாமிட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வரும் அனைத்து வாகனங்களுக்கும், கிருமி நாசினி மருந்து தெளித்த பின், திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இது குறித்து திருத்தணிகால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:
பறவை காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக பொன்பாடி சோதனைச் சாவடியில் கால்நடை துறையின் சார்பில் நோய் தடுப்பு முகாம் அமைத்துள்ளோம்.
மூன்று ஷிப்ட் முறையில் கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் ஆய்வாளர், உதவியாளர் கொண்ட குழுவினர், ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி வரும் வாகனங்களின் சக்கரங்களுக்கு நோய் தடுப்பு மருந்து தெளித்து பின் அனுமதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.