/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனிம வள சுரண்டலை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
கனிம வள சுரண்டலை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
கனிம வள சுரண்டலை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
கனிம வள சுரண்டலை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 14, 2025 10:48 PM

திருமுக்கூடல்: உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கல் குவாரி பெயரில் கனிம வளங்கள் சுரண்டலை கண்டித்து, உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், திருமுக்கூடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், 15 ஆண்டுகளாக தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. பெரும்பாலான கல்குவாரிகளில் அனுமதித்த அளவை காட்டிலும் கூடுதலாக ஆழம் தோண்டி பாறை கற்கள் எடுத்தல், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கல் மற்றும் மண் கொட்டி வைத்தல், வேலி அமைத்தல், வரத்து கால்வாய்கள் அழித்தல் உள்ளிட்ட விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை கண்டித்து, உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், திருமுக்கூடலில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
இவர்கள், தங்கள் கண்கள் மற்றும் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு, வாட்டர் கேன் மூடியை சுவாசப் பகுதியாக வாயில் வைத்து நுாதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல் குவாரிகளின் அத்துமீறலுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் காவல்துறையினர் ஆதரவாக உள்ளதாகவும், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசு ஏற்படுவதை தடுக்காமல் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டி போராட்டக் குழுவினர் கோஷங்களை எழுப்பினர்.

