/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பை தடுக்க கருங்கல் பதிக்கும் பணி
/
மண் அரிப்பை தடுக்க கருங்கல் பதிக்கும் பணி
ADDED : மே 26, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் புறவழிச் சாலையான, மிலிட்டரி சாலை உள்ளது.
இச்சாலையில், தேனம்பாக்கம் விஷ்ணு நகரில் வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் 75 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்ட உயர்மட்ட பாலம், கடந்த ஆண்டு கட்டப்பட்டது.
இந்நிலையில், வேகவதி ஆற்றில் பருவமழையின்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பாலத்தின் துாண்கள் அமைந்துள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாலத்தின் கீழ் இருபுறமும், கான்கிரீட் தளமும் மற்றும் ஐந்து மீட்டர் நீளத்திற்கு பெரிய அளவிலான கருங்கல் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.