/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு கோவில் தெருவில் மழைநீர் தேக்கம்
/
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு கோவில் தெருவில் மழைநீர் தேக்கம்
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு கோவில் தெருவில் மழைநீர் தேக்கம்
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு கோவில் தெருவில் மழைநீர் தேக்கம்
ADDED : ஜன 20, 2025 01:35 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காலண்டார் தெருவில், பிரவாளவர்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் குளத்திற்கு மழைநீர் செல்லும் வகையில், கோவிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தாமல்வார் தெருவில், மழைநீர் உறிஞ்சு குழியுடன், வடிகல்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கால்வாய் வாயிலாக குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர், கோவில் ஒட்டியுள்ள தெற்கு மாடவீதியில் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், இத்தெருவில் வசிப்போரும், கோவிலுக்கு செல்வோரும் சகதியாக மாறிய மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, தாமல்வார் தெருவில் இருந்து, காலண்டார் தெருவில் உள்ள பிரவாளவர்ண சுவாமி கோவில் குளத்திற்கு மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், மழைநீர் கால்வாயை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, தெருவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.