/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் மழைநீர்
/
வடிகால்வாயில் அடைப்பு சாலையில் தேங்கும் மழைநீர்
ADDED : அக் 13, 2024 01:07 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சித்ரகுப்தர் கோவில் அருகில், வடிகால்வாய் வாயிலாக, மழைநீர் வெளியேறும் ஓட்டையில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் உள்ள கடைளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் சகதியாக மாறிய மழைநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலையோரம் கடை நடத்தி வரும், நடைபாதை வியாபாரிகள், கடை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, அன்னை இந்திரா காந்தி சாலையில், வடிகால்வாய் வாயிலாக மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், அடைப்பை நீக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.