/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரியில் மிதந்த இன்ஜினியர் உடல் மீட்பு
/
ஏரியில் மிதந்த இன்ஜினியர் உடல் மீட்பு
ADDED : பிப் 03, 2025 03:56 AM
படப்பை:படப்பையை அடுத்த ஆத்தனஞ்சேரி ஏரியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று, அழுகிய நிலையில் மிதப்பதாக, நேற்று காலை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்த நபர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல், 28, என்பது தெரியவந்தது.
கட்டட பொறியாளரான இவர், படப்பையை அடுத்த பனப்பாக்கத்தில் தங்கி, தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 27ம் தேதி, சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். சொந்த ஊருக்கும் செல்லவில்லை, திரும்பியும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பழனிவேல் காணாமல் போனதாக, சில நாட்களுக்கு முன், ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், படப்பை, ஆத்தனஞ்சேரி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

