/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை விழிப்புணர்வு
/
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை விழிப்புணர்வு
ADDED : பிப் 09, 2024 11:04 PM
காஞ்சிபுரம்:கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு தினம், பிப்., 9ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகம் முழுதும் தொழிலாளர் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில், நேற்று விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நேற்றைய நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. இதில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.