/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் துண்டு பிரசுரம் வழங்கி எலும்பு, மூட்டு விழிப்புணர்வு பிரசாரம்
/
காஞ்சியில் துண்டு பிரசுரம் வழங்கி எலும்பு, மூட்டு விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சியில் துண்டு பிரசுரம் வழங்கி எலும்பு, மூட்டு விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சியில் துண்டு பிரசுரம் வழங்கி எலும்பு, மூட்டு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஆக 03, 2025 10:37 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த 8 கி.மீ., நடைபயிற்சி இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு, எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, விளம்பர பதாகை, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கி.மீ., நடைபயிற்சி இயக்கத்தை ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை நடத்தி வருகிறது.
அதன்படி, இம்மாதத்திற்கான நடை பயிற்சியை, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மனோகரன், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நேற்று துவக்கி வைத்தார்.
நடைபயிற்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி, மாநகராட்சி சுகாதார நிலை குழு தலைவர் சங்கர், இந்திய முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கத்தின் மாநில முன்னாள் செயலர் சரவணன், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மதிப்புறு செயலர் முத்துகுமரன் உட்பட 95 பேர் பங்கேற்றனர்.
இந்திய எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், வரும் 10ம் தேதி வரை நடைபெறும், எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, விளம்பர பதாகை, துண்டு பிரசுரம் உள்ளிட்டவை நடைபயிற்சியில் பங்கேற்றோருக்கு வழங்கப்பட்டன.