/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தக திருவிழா -- வரலாற்று பதிவுகளை தேடும் வாசகர்களால் அரசர்கள் பற்றிய புத்தகம் அதிக விற்பனை

ADDED : பிப் 06, 2025 01:19 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக மைதானத்தில், வரும் 10ம் தேதி வரை நடக்கும் புத்தக திருவிழாவில், ஏராளமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், சிறுகதை, நாவல் ஆகிய புத்தகங்களுக்கும் கொண்டுக்கப்பட்டு பல அரங்குகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதில், புத்தக திருவிழாவிற்கு வரும் வாசகர்கள், வரலாறு, கல்வெட்டு சார்ந்த ஆராய்ச்சி நுால்கள், சோழர்கள் குறித்து புத்தகங்கள் வாங்குவோரை அதிகமாக காண முடிகிறது.
ஆர்வம்
வரலாற்று அரசர்கள் வாழ்ந்த காலம் குறித்து, புத்தகங்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் புத்தகங்களில் பாடங்களில் அறியாக முடியாத அரசர்களின் குறித்து புத்தங்களை காண முடிகிறது. இதுபோன்ற அரசர்களின் வரலாறு அறிந்து கொள்ள ஆர்வம் துாண்டுகிறது.
- எஸ்.பின்தா,
சாத்தனஞ்சேரி, உத்திரமேரூர்.
வரலாற்று நுணுக்கம்
மரபு நடை பயணத்தில், வரலாற்று எச்சங்களை பார்க்கும்போது, சில நுணுக்கங்களை பார்க்க முடிவதில்லை. புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் வரலாற்று புத்தகங்களை பார்க்கும்போது, மீண்டும் அதை இடத்தை பார்க்கும்போது, கவன சிதறல்கள் இன்றி பார்க்க வேண்டும் என தோணுகிறது.
டி.பி.சாத்விகா,
வாலாஜாபாத்.