/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு
/
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு
பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு
ADDED : அக் 19, 2025 12:59 AM

உத்திரமேரூர்: திருமுக்கூடல் பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை, உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையால், செய்யாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருமுக்கூடல் பாலாற்றிலும், ஒரு வாரமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாலாற்றில் செல்லும் வெள்ளத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள், பாலத்தின் மீது நின்றவாறு தினமும் வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இந்நிலையில், குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ், 16, என்ற சிறுவன், திருமுக்கூடல் பாலாற்றின் கரையில், நின்று வேடிக்கை பார்த்துள்ளான்.
அப்போது, திடீரென தவறி ஆற்றில் விழுந்த சிறுவன், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் சிக்கி கொண்டான். என்னை காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டான்.
அப்பகுதியினர், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை உயிருடன் மீட்டனர்.