ADDED : டிச 07, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பீஹார் மாநிலம், ஜரங் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வர்தாஸ் மகன் முருகேஷ் தாஸ், 29; கட்டுமான தொழிலாளி. இவரது குடும்பத்தினருடன், பால்நெல்லுார் கிராமத்தில் தங்கி, கட்டடம் கட்டுமான பணி செய்து வந்தார்.
நேற்று காலை, வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், முகேஷ் தாஸ் என்பவரின் ஆறு வயது மகன் அவிநேக்குமார் பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்துள்ளார்.
நீரில் மூழ்கி இருந்த சிறுவனை, அவரது பெற்றோர் மீட்டு, மாத்துார் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.